Sunday, November 9, 2008

ஏ ஆர் ரஹ்மான் 2009,2010



எப்போதும் இல்லாதது போல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது அதிக படங்களுக்கு இசை அமைக்க ஒப்புகொண்டுளார்.
ரஜினின் எந்திரன், கமலின் மர்மயோகி, மணிரத்னத்தின் ராவனணன்,கதிரின் மாணவர் தினம், கௌதம் வசுதேவ மேனனின் சென்னையில் ஒரு மழை காலம், சௌந்தர்யாவின் சுல்தான் தி வார்ரியர்ஸ்,ராஜிவ் மேன
ன் இயக்கம் ஒரு இந்தி படம், சுபாஷ் கையின் இந்தி படம், மலையாள ஜப்பான் கூட்டுறவில் தயாராகும் ஓர் மலையாள படம், இந்தி கஜினி, என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.ஒரு தமிழரின் இசை வீச்சு எல்லைகளை கடந்து விரிந்து செல்வது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தருகிறது.மேலும் காலத்தின் பின்னோக்கி பார்க்கும் மர்மயோகி போன்ற படங்களின் இசையும் , காலத்தின் முன்னோக்கி பார்க்கும் எந்திரன் போன்ற படங்களின் இசையும், நாம் தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில், நமக்கு தெரியாமல் சென்னையின் ஒரு இருட்டு இடத்தில் இருந்து ரஹாமன் வழியாக உருவாகி கொண்டிருக்கிறது. சென்னைவாசிகள் என்ற முறையிலும், தமிழர் என்ற முறையிலும் இதற்காக நாம் பெருமைப்பட்டு கொள்ளலாம்.மேலும் இப்ல் சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டிக்காக ஒரு பாடலையும் இசை அமைத்து கொடுத்திருக்கிறார்.

Saturday, November 8, 2008

சாம்பின் லீக்போட்டி 2008டிசம்பர் :சென்னை சூப்பர் கிங்க்ஸ்: அதிரடிகார தோனி மச்சான் சென்னைக்கு ஒரு மகுடம் வைப்பான்



கிரிக்கெட் உலகின் புதிய அவதாரங்களான ஐபிஎல், ஐசிஎல் ஆகிய இரு அமைப்புக்கள் வாயிலாக சென்னையின் பெயர் நாடு முழுதும் உற்சாகமாக ஒலித்து கொண்டிருக்கிறது. கடைந்த மே மாதம் நடைபெற்ற IPL முதல் சீசொனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது. தற்போது நடைபெற்றுவரும் ஐசிஎல் இன் இரண்டாவது சீசொனில் சென்னை சூப்பர் ஸ்டார் அணி லீக் போட்டிகளில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள சாம்பின் லீக் போட்டிக்கு விளையாட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தகுதி பெற்று உள்ளது. சொந்த மைந்தர்கள் அதிக இல்லாமல் போனாலும் பத்ரிநாத், பாலாஜி மற்றும் சக நாட்டு வீரர்களான ரெய்னா, கோணி,படேல், என வலுவாகவே உள்ளது. இவர்களோடு ஹைடன், முரளிதரன், பிளெமிங் என வெளிநாட்டு அசுர சகச வீரர்கள் உள்ளனர். அதே சமயம் இதே சாம்பியன் லீக் போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ள தென் ஆப்ரிக்க அணியான டைடன் அணியில் உள்ள சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர் அல்பே மார்கேளுக்கு இன்னும் எந்த அணியில் விளையாடுவது என இன்னும் குழப்பம். ஆனால் இதே குழப்பதில் இருந்த ஆஸ்திரேலியா வீரர் மைக் ஆசீ சென்னை அணிக்கு விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். மற்றொரு வீரரான நியூ சீலாந்து வீரரான ஜெகோப் ஓரம் காயம் காரணமாக விலகி உள்ளார். இவ்வாறாக பிரச்சினை பல இருப்பினும் சென்னை அணிக்கு டோனி இருக்கிறார்.சென்னை இரவலாக வாங்கி எடுத்து கொண்ட பெரிய நட்சத்திரம். டோனியின் வெற்றி ராசி சென்னையை கண்டிப்பாக வெற்றிபெற வைக்கும். தோனி என்ற தங்க அச்சாணி மட்டும் தன் வண்டியையும் மீறி சக்கரத்தையும் மீறி வெளிய பளிச்சென தெரிகிறது. எனவே அதிரடிகார தோனி மச்சான் சென்னைக்கு ஒரு மகுடம் வைப்பான்.இந்நிலையில் கிழ்கண்ட இரு விஷயங்கள் நடந்தால் மட்டுமே சென்னை அணயின் ஆட்டம் ரசிக்கப்படும்

வணக்கம்

Glitter Photos